உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் இன்று (30ம் தேதி)மகா யாக பெருவிழா

புதுச்சேரி திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் இன்று (30ம் தேதி)மகா யாக பெருவிழா

புதுச்சேரி: இரும்பை ஸ்ரீ பால திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில், அஷ்ட பைரவர் மகா யாக பெரு விழா, இன்று (30ம் தேதி) நடக்கிறது.புதுச்சேரி அடுத்த இரும்பை குபேரர் நகரில் (டோல்கேட் அருகே), ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் எழுந்தருளியுள்ள ஷேத்திரபால பைரவர், ஜென்மாஷ்டமி அஷ்ட பைரவர் மகா யாக பெருவிழா இன்று (30ம் தேதி) நடக்கிறது.பைரவர் அவதரித்த நாளை முன்னிட்டு நடக்கும் யாகத்தையொட்டி, மாலை 4:00 மணிக்கு அஷ்ட பைரவர் பூஜை, ஹோமமும், அதனை தொடர்ந்து, மகா அபிஷேகம், கலசாபிஷேகம், இரவு சுவாமி உள்புறப்பாடும் நடக்கிறது.
தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது.ஏற்பாடுகளை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் டிரஸ்டியினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !