கமுதி பகுதியில் வதந்தியால் வீடுகளுக்கு முன் வேப்பிலை மீது நெய் தீபம்
ADDED :2546 days ago
கமுதி: கமுதி பகுதியில் பரவிய வதந்தியால் பெண்கள் வீடுகளுக்கு முன் வேப்பிலையை பரப்பி நெய் தீபம் ஏற்றி வருகின்றனர். திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தின் போது தீபம் ஏற்றும் கொப்பரை சேதமடைந்ததாகவும், அதற்கு பரிகாரமாக வீடுகளுக்கு முன் கோலமிட்டு வேப்பிலையை பரப்பி, அதன் மேல் மூன்று நெய் விளக்குகள் ஏற்ற வேண்டும் என்ற வதந்தி காட்டுத் தீயாக பரவியது. இதை உண்மை என்று நம்பி கமுதியில் பெண்கள் வீடுகளுக்கு முன் வேப்பிலையை பரப்பி மூன்று நெய் விளக்குகளை ஏற்றி வழிபட்டு பரிகாரம் தேடி வருகின்றனர். வாட்ஸ் அப்பில் பரவிய வதந்தியால், கமுதி பகுதியில் பெண்கள் ஒருவரை ஒருவர் பார்த்து, மற்ற வீடுகளிலும் இதேபோல் வீடுகளுக்கு முன் தீபம் ஏற்றுவது அதிகரித்துள்ளது.