திருப்பரங்குன்றம் ஆதி சொக்கநாதர் கோயிலில் அங்கப்பிரதட்சணம்
ADDED :2546 days ago
திருப்பரங்குன்றம்: மகாதேவ வைக்கத்தஷ்டமியை முன்னிட்டு திருப்பரங்குன்றம் ஆதி சொக்கநாதர் கோயிலில் சிவபெருமான், மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. கோயில் எதிரில் உள்ள திருமண மண்டபத்தில் மகாதேவ அஷ்டமி கமிட்டியினர் சார்பில் வேதசிவாகம பாடசாலை மாணவர்களால் பூஜைகள் முடிந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் சாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம் செய்தனர்.