பவானி காசி விஸ்வநாதர் கோவிலில் கால பைரவாஷ்டமி விழா
ADDED :2545 days ago
பவானி: பவானி, காசி விஸ்வநாதர் கோவிலில் நேற்று (நவம்., 30ல்) மாலை, கால பைரவாஷ்டமி விழா நடந்தது. பவானி, காவிரி வீதியில் உள்ள, விசாலாட்சி உடனமர் காசிவிஸ்வநாதர் கோவி லில், தேய்பிறை அஷ்டமி திதி சிறப்பு பூஜை நடந்தது.
நேற்று (நவம்., 30ல்) மாலை கால பைரவர் சுவாமிக்கு, பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. 1,008, வடைமாலையுடன் தங்க கவசம் சாத்தப்பட்டு, பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து, மஹா தீபாராதனை நடந்தது. பவானி, குமாரபாளையம், காளிங்கராயன் பாளையம் உட்பட, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.