கடலூரில் ஐயப்ப சுவாமி வீதியுலா
ADDED :2612 days ago
கடலூர்:கடலூர் மஞ்சக்குப்பத்தில் ஐயப்ப சுவாமி வீதியுலா நடந்தது. கடலூர், மஞ்சக்குப்பம் சாலைக்கரை மாரியம்மன் கோவிலில் உள்ள ஐயப்ப சுவாமி்க்கு கடந்த 17ம் தேதி மண்டல
கால பூஜை துவங்கியது. 21ம் தேதி 108 சங்காபிஷேகமும், 25ம் தேதி பால்குட ஊர்வலமும் நடந்தது.நேற்று 2ம் தேதி காலை சிறப்பு அலங்காரத்தில் ஐயப்ப சுவாமி வீதியுலா நடந்தது. மதியம் மகா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.