மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 1008 சங்காபிஷேகம்
ADDED :2857 days ago
மதுரை: கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கார்த்திகை மாதம் மூன்றாவது சோமவார 1008 சங்காபிஷேகம் வழிபாடு மற்றும் சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.