உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில் சங்காபிஷேகம்

கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில் சங்காபிஷேகம்

கன்னிவாடி:கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில், கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம்ம் நடந்தது. நேற்று(டிசம்., 3ல்), 3வது சோமவாரத்திற்கான சங்காபிஷேகம் நடந்தது. ஓம்கார விநாயகர், நந்தி, சோமலிங்கசுவாமிக்கு திரவிய அபிஷேகம் நடந்தது.


மெய்கண்ட சித்தர் குகையில், வேதி தீர்த்தம் நிரப்பப்பட்ட 108 சங்குகளுக்கு விசேஷ பூஜைகள் நடந்தது. மூலவருக்கு சங்காபிஷேக பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திண்டுக்கல் அபிராமி அம்மன்கோயில், கூட்டுறவு நகரில் உள்ள செல்வ விநாயகர் கோயில் உட்பட பல்வேறு சிவன்கோயில்களில் சங்காபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !