தேனி வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
ADDED :2538 days ago
தேனி: தேனி அல்லிநகரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நேற்று முன்தினம் வருஷாபிஷேகத்திற்கான திருமஞ்சனம் நடந்தது. நேற்று காலை வருஷாபிஷேக பூஜைக்குப்பின் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது.இதில் கன்னிகா தானம், மாங்கல்ய நாண் பூட்டு, மங்கல மாலை மாற்று நிகழ்ச்சிகள் நடந்தது. பிரசாதமாக மஞ்சள், குங்குமம், மாங்கல்ய கயிறு பெண்களுக்கு வழங்கப்பட்டது. அன்னதானம் நடந்தது. பூஜைகளை அர்ச்சகர் மோகன் தலைமையிலான சடகோப ராமானுஜ குழுவினர் செய்தனர். ஏற்பாடுகளை அல்லிநகரம் கிராமக்கமிட்டி குழு நிர்வாகிகள் கோவிந்தசாமி, வீரபத்திரன், தாமோதரன், வீரமணி, ஸ்ரீதரன் செய்திருந்தனர்.