உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்ப பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்

ஐயப்ப பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, அழகாபுரி கிராமத்தில், சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள், பாம்பாலம்மன் கோவில் முன் அக்கினி குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். அழகாபுரியில் இருந்து, சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள், கடந்த, 24லிருந்து, விரதத்தை துவக்கினர். அப்போது, சுற்றியுள்ள கிராமங்கள் வழியாக, ஐயப்ப சுவாமி வீதி உலா நடந்தது. நேற்று முன்தினம் காலை, சக்தி கன்னிகளுக்கு அருள் அழைத்து, நெய்விளக்கு எடுத்துவரப்பட்டது. இரவு, 8:30 மணியளவில், பாம்பாலம்மன் கோவில் முன், குண்டம் மூட்டப்பட்டு, ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் பக்தர்கள் ஒவ்வொருவராக குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். இதில் 300 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !