காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் கொடி மர கும்பாபிஷேகம்
ADDED :2507 days ago
காஞ்சிபுரம்: வழக்கறுத்தீஸ்வரர்கோவிலில் புதிய கொடி மரத்திற்கு செப்புத் தகடு பொருத்தி, புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும், வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் இரு ஆண்டுகளுக்கு முன், திருப்பணி துவங்கப்பட்டது. சிதிலம் அடைந்த பழைய கொடி மரத்தை அகற்றி, புதிய கொடி மரம் பொருத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. தனியார் நன்கொடையில், கடந்த ஆண்டு பிப்., 3ல் கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது; பிப்., 9ல் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கர்நாடகாவைத் சேர்ந்த பக்தர் ஒருவர், கொடி மரத்திற்கு செப்புத் தகடு பொருத்த நன்கொடை வழங்கினார். அந்த பணி முடிந்துள்ளதால், நேற்று (டிசம்., 3ல்)காலை, கொடி மரத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.