உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் 108 சங்காபிஷேகம்

நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் 108 சங்காபிஷேகம்

நடுவீரப்பட்டு:நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் மூன்றாம் சோம வாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடந்தது.விழாவை முன்னிட்டு நேற்று (டிசம்., 3ல்) மாலை 6:00 மணிக்கு 108 சங்கு ஸ்தாபனம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

தொடர்ந்து வேத மந்திரங்கள் ஓதப்பட்டு ஹோமம் சிறப்பு பூஜை நடந்தது. இரவு 7:00 மணிக்கு மகா பூர்ணாஹீதி நடந்து, ஹோம வேள்வியில் வைக்கப்பட்ட கலசங்கள் ஆலய உலாவாக வந்து மூலவர் கைலாசநாதருக்கு 108 சங்காபிஷேகம் மற்றும் கலசாபிஷேகம் நடந்தது.

இரவு 10:00 மணிக்கு உற்சவர் காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.அதே போன்று, சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரர் கோவிலில் மூன்றாம் சோமவார பூஜை நடந்தது. விழாவை முன்னிட்டு மாலை 4:00 மணிக்கு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !