உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யப்ப சுவாமி விளக்கு பூஜை

அய்யப்ப சுவாமி விளக்கு பூஜை

ஊத்துக்கோட்டை: பூண்டி ஒன்றியம், மேலக்கரமனுார் ஊராட்சியில், ஒவ்வோர் ஆண்டும், கார்த்திகை மாதம், அய்யப்ப சுவாமி விளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம்.  இந்தாண்டு, இவ்விழா தொடர்ந்து, ஐந்தாம் ஆண்டாக, நேற்று முன்தினம் இரவு நடந்தது. முன்னதாக, காலை, அய்யப்ப படத்திற்கு, மாலை அணிவித்து, பக்தர்கள் பஜனை நிகழ்ச்சி நடத்தினர். மாலை, 4:00 மணிக்கு, பெண்கள், சிறுமியர் விளக்கேந்தி செல்ல, செண்டை மேளம் வாத்தியம் முழங்க, அய்யப்ப சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !