மாரியம்மன் கோயிலில்: பிப்20 கொடியேற்றம்!
ADDED :5016 days ago
நத்தம் :நத்தம் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா, பிப்., 20 ல், கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இங்கு மாசியில் 15 நாள் விழா நடைபெறும். பிப்., 21 ல், அம்மனுக்கு கரந்தன் மலை கன்னிமார் கோயிலில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டு, காப்புக்கட்டப்படும். பிப்., 24 ல், அம்மன் நகர் வலம் வருதல்; 28 ல், அன்ன வாகனம்; மார்ச் 2 ல், சிம்ம வாகனம்; மார்ச் 4 ல், பால்குடம்; மறுநாள் மஞ்சள் பாவாடை சாட்டுதல்; மார்ச் 6 ல், அக்னிச்சட்டி, வழுக்கு மரம் ஏறி பூக்குழி இறங்குதல் நடக்கிறது. மார்ச் 7 ல், பூப்பல்லக்கில் அம்மன் நகர் வலம் வந்து மஞ்சள் நீராடுவார். ஏற்பாடுகளை, அறநிலைய துறை இணை ஆணையர் பாஸ்கரன், நிர்வாக அலுவலர் செந்தில்குமார், பூஜாரிகள் சொக்கையா, சின்னராசு, சுப்புராஜ், நடராஜ் செய்துள்ளனர்.