புதுக்கோட்டையில் வரும் 19 ல் யோகிராம் சுரத்குமார் குருபூஜை
திருநெல்வேலி : பகவான் யோகி ராம்சுரத்குமார் ஆராதனை மற்றும் குருபூஜை விழா வரும் 19ம்தேதி காலை புதுக்கோட்டையில் நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை தியான மண்டபத்தில் வரும் 19ம்தேதி பகவான் யோகி ராம்சுரத்குமார் ஆராதனை மற்றும் குருபூஜை விழா நடக்கிறது. இதனை முன்னிட்டு காலை 7 மணிக்கு தியானமும், 10 மணிக்கு கன்னியாகுமரி மாரியம்மா பஜனைக்குழுவின் பஜனையும், மதியம் 12 மணிக்கு ஓம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெய் ஜெய்ராம் என்ற மகா மந்திர நாம ஜெபமும் நடக்கிறது. இதனையடுத்து 12.45 மணிக்கு சுரதகவசம், பல்லாண்டு வாழ்க பாடல் , பகவானுக்கு பிரசாதம் சமர்ப்பித்தலும், 1 மணிக்கு 500 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 9 மணி முதல் 20ம் தேதி காலை 3.45 மணி வரை தியானம், அனுபவ அரங்கம், பகவான் மகிமைகள், போதனைகள் மற்றும் நாம ஜெபம் நடக்கிறது. இதில் விசிறி சங்கர், சந்தோஷம், சூரியமூர்த்தி, திருமலைநம்பி, சிவா, ராமகைலாசம், டாக்டர் சரவணன், ராம.திருமலை மற்றும் தியான மண்டப நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். காலை 4.30 மணிக்கு பிரசாத வினியோகத்துடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை பகவான் ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் தியான மைய அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.