கரூர் ரெங்கநாதர் கோவிலில் வரும் 8ல் பகல் பத்து
ADDED :2576 days ago
கரூர்: கரூர் அபய பிரதான ரெங்கநாத சுவாமி கோவிலில் வரும், 18ல், பரமபத வாசல் திறப்பு திருவிழா நடக்கிறது. பிரசித்தி பெற்ற கோவிலில் வரும், 8 முதல், 17 வரை பகல் பத்து நிகழ்ச்சி நடக்கிறது. 18 ல் பரமபத வாசல் திறப்பு விழாவும், நாள் தோறும் வைகுண்ட ஏகாதசி உற்சவமும் நடக்கிறது. அதைதொடர்ந்து, இராப்பத்து நிகழ்ச்சி, 27 வரை நடக்கிறது. 28 ல் ஊஞ்சல் உற்சவம் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.