உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈரோடு கருங்கல்பாளையம் மாரியம்மன் கோவில் குண்டம் ஏற்பாடு தீவிரம்

ஈரோடு கருங்கல்பாளையம் மாரியம்மன் கோவில் குண்டம் ஏற்பாடு தீவிரம்

ஈரோடு: கருங்கல்பாளையம், மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா ஏற்பாடுகள், தீவிரமாக நடந்து வருகிறது.

ஈரோட்டில், பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான, கருங்கல்பாளையம் மாரியம்மன் கோவில் குண்டம் தேர்திருவிழா, கடந்த, நவம்பர் 27ல், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 29ல், கம்பம் நடப்பட்டது. இதற்கு, பக்தர்கள், தினமும், காவிரியாற்றில் இருந்து, தீர்த்தம் எடுத்து வந்து, ஊற்றி வழிபட்டு வருகின்றனர். வரும், டிசம்பர், 9ல், குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

ஈரோடு, குமாரபாளையம், பள்ளிப்பாளையம் உள்ளிட்ட, பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கவும், குண்டம் இறங்கும் நிகழ்ச்சியை காணவும், வருவது வழக்கம். பக்தர்கள், கூட்ட நெரிசலில் சிக்கக்கூடாது, பதட்டமின்றி குண்டம் இறங்கும் நிகழ்ச்சியை காண வேண்டும் என, தனியாக மூங்கிலில் கேலரி அமைக்கும் பணியில், கோவில் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் மூலம், குண்டம் இறங்கும் பக்தர்களுக்கும், அதை காண வரும் பக்தர்களும், மனநிறைவுடன் சுவாமி தரிசனம் செய்ய முடியும். இது மட்டுமில்லாமல், குண்டம் அமைக்கும் ஏற்பாடுகளும், தீவிரமாக நடந்து வருகிறது என, விழாக்குழுவினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !