உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆலயங்களுக்கு அழைக்கும் ஐ.ஆர்.சி.டி.சி.,

ஆலயங்களுக்கு அழைக்கும் ஐ.ஆர்.சி.டி.சி.,

கோவை:கோவை வழியாக வரும், 14ம் தேதி கர்நாடக ஆலயங்களுக்கு இயக்கப்படும் ஐ.ஆர்.சி.டி. சி., சிறப்பு ரயிலுக்கு முன்பதிவுகள் வரவேற்கப்படுகின்றன.

மதுரையில் இருந்து வரும், 14ம் தேதி புறப்படும் ரயில் திண்டுக்கல், திருச்சி, சென்னை, சேலம், ஈரோடு, கோவை, போத்தனூர் வழியாக கர்நாடக மாநிலம் உடுப்பி கிருஷ்ணர், கொல்லூர் மூகாம்பிகை, சிருங்கேரி சாரதா பீடம், ஹோரநாடு அன்னபூரணி உள்ளிட்ட ஆலயங்களுக்கு பயணிகளை அழைத்துசெல்கிறது.ஐந்து நாட்கள் கொண்ட யாத்திரைக்கு, 6,930 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்றொரு பிரிவாக ஐந்து நாட்கள் கொண்ட கோவா சுற்றுலாவுக்கு, 4,725 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விபரங்களுக்கு, 90031 40655 எனும் கோவை ஐ.ஆர்.சி.டி.சி., அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !