அலங்காநல்லூர் ராஜலிங்கேஸ்வரர் கோயில் வருடாபிஷேகம்
ADDED :2830 days ago
அலங்காநல்லூர்:அலங்காநல்லூர் வெள்ளிமலை ராஜலிங்கேஸ்வரர் கோயில் வருடாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு 16 வகையான அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. தியான மண்டபத்தில் 18 சித்தர்கள், சாய்பாபாவிற்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நிர்வாகி ராஜீ சுவாமி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.