உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவல்லிக்கேணியில் ஸ்ரீ குருவாயூரப்பன் சேவா சமிதி சார்பில், இலவச பூணுால் அணிவிப்பு விழா

திருவல்லிக்கேணியில் ஸ்ரீ குருவாயூரப்பன் சேவா சமிதி சார்பில், இலவச பூணுால் அணிவிப்பு விழா

சென்னை: சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள, ஸ்ரீ குருவாயூரப்பன் சேவா சமிதி சார்பில், இலவசமாக பூணுால் அணிவிப்பு, திருமண விழா மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட உள்ளன. இதுகுறித்து, அந்த அமைப்பின் செயலர், கோவை பத்மநாபன் கூறியதாவது:எங்கள் அமைப்பின், 50வது ஆண்டு விழா, மார்ச், 3ம் தேதி, திருவல்லிக்கேணி பண்டு திருமண மண்டபத்தில் கொண்டாடப்படுகிறது. அன்று, இலவசமாக, பூணுால் அணிவிப்பு மற்றும் திருமணங்களை நடத்த உள்ளோம்.விபரங்கள் தேவைப்படுவோர், 94446 71756, 97910 56284 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !