கன்னிவாடி ராஜகாளியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜைகள்
கன்னிவாடி:அமாவாசையை முன்னிட்டு தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. வாலை, சக்தி அம்மனுக்கு சிறப்பு திருமஞ்சன அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது.
யோக ஆஞ்சநேயர், போகர், காளிங்க நர்த்தன கிருஷ்ணர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது. பக்தர்கள் திருவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.
கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், கார மடை ராமலிங்கசுவாமி கோயில், ஆத்தூர் காசி விசுவநாதர் கோயில்களில் அமாவாசை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
*சின்னாளபட்டி: அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயில், பை-பாஸ் ரோடு சந்தனக்கருப்பண சுவாமி கோயில், அம்பாத்துரை வீரபக்த ஆஞ்சநேயர் கோயிலில், சிறப்பு அபிஷேகத்துடன் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது.
* நத்தம்: நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமிக்கு பால், இளநீர், சந்தனம், பன்னீர், மஞ்சள்நீர், தயிர், விபூதி, தேன், திருமஞ்சணம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.