பெ.நா.பாளையம் சாம்பமூர்த்திஸ்வரர் கோவிலில் அன்னதான திட்டம் அவசியம்
ADDED :2595 days ago
பெ.நா.பாளையம்: சாம்பமூர்த்திஸ்வரர் கோவிலில், அன்னதானம் திட்டம் தொடங்க, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பெத்தநாயக்கன்பாளையம் அருகே, ஏத்தாப்பூர், சாம்பமூர்த்திஸ்வரர் கோவிலில், பிரதோஷம், பவுர்ணமி, சிவராத்திரி போன்ற விழாக்காலங்களில், சிறப்பு பூஜை நடக்கிறது. அதில், திரளான
பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.
ஆனால், அறநிலையத்துறையினர் கட்டுப்பாட்டிலுள்ள கோவிலில், குடிநீர், கழிப்பிட வசதி இல்லாததால், பக்தர்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதுதவிர, நிரந்தரமாக அன்னதானம் திட்டம் தொடங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க் கின்றனர்.