உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரியில் வெளிநாட்டு பக்தர்கள் தரிசனம்

சதுரகிரியில் வெளிநாட்டு பக்தர்கள் தரிசனம்

ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலில் கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு வெளிநாட்டு பக்தர்கள் உட்பட ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.கார்த்திகை அமாவாசைக்காக டிச.4 பிரதோஷம் முதல் நான்கு நாட்கள் மலைக்கோயில் வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கபட்டனர். காளியம்மன், பேச்சியம்மன், இரட்டை லிங்கம், பிலாவடி கருப்பசாமிகளை தரிசனம் செய்த பின் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்களில் தரிசனம் செய்தனர்.

கடந்த நான்கு நாட்களில் 7 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இறுதி நாளான நேற்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் மட்டுமின்றி, பெல்ஜியம், சுவீட்சர்லாந்து நாடுகளை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பக்தர்களும் தரிசனம் செய்தனர்.சுவீட்சர்லாந்தை சேர்ந்த பெட்டினா கூறுகையில், 3 வார பயணமாக இந்தியா வந்துள்ளோம், மும்பை, புதுச்சேரி உட்பட பல இடங்களுக்கு சென்றுவிட்டு, தமிழகத்தில் சதுரகிரி மலையில் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளோம். மிகவும் புனிதமான, தெய்வீகதன்மை உள்ள இடமாக சதுரகிரி திகழ்வது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது,என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !