கல்குளம் கிராமத்தில் அதிசய வேப்ப மரம்
ADDED :2580 days ago
லத்துார்: கல்குளம் கிராமத்தில் உள்ள கோவிலின் வித்தியாச வேப்ப மரம், அனைவரையும் கவர்கிறது. லத்துார் ஒன்றியம், கல்குளம் கிராமத்தில் தேவிமாரி முத்தாலம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள, நுாற்றாண்டை கடந்த வேப்ப மரம், காண்போரை கவர்கிறது. மூன்று அடித்தளங்களுடன், யானையின் பாதம் போன்று இம்மரம் இருப்பதாலே, இதை காண்போர் அனைவரும் ஆச்சரியம் அடைகின்றனர். மரத்தின் கீழே, கடவுள் சிலை நிறுவப்பட்டு, வழிபாடும் நடக்கிறது.