சேலம் அழகிரிநாதர் கோவிலில்,பகல் பத்து உற்சவம் தொடக்கம்
ADDED :2525 days ago
சேலம்: அழகிரிநாதர் கோவிலில், பகல் பத்து உற்சவம் தொடங்கியது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில், டிச., 18ல், சொர்க்கவாசல் திறக்கப் படுகிறது. அதன் தொடக்கமான, பகல் பத்து உற்சவம், நேற்று (டிசம்., 7ல்) தொடங்கியது. இதையொட்டி, மாலை, அழகிரிநாதர், ஸ்ரீதேவி, பூதேவியுடன், ராஜ அலங்காரத்தில், திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளினார். திருமொழி வேதபாராயணம் சேவித்தல், திருவாராதனை, தீபாராதனை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, திருக்கொட்டாரத்தில் சுவாமி பல்லக்கு உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோல், மாவட்டத்திலுள்ள பல்வேறு பெருமாள் கோவில்களில், பகல் பத்து உற்சவம் தொடங்கியது.