உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / டிச.14 மதுரை மீனாட்சி கோயிலில் எண்ணெய் காப்பு உற்ஸவம்

டிச.14 மதுரை மீனாட்சி கோயிலில் எண்ணெய் காப்பு உற்ஸவம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மார்கழி திருவாதிரையை முன்னிட்டு எண்ணெய் காப்பு உற்ஸவம் டிச.,14 முதல் 22 வரை நடக்கிறது. உற்ஸவ நாட்களில் தினமும் மாலை 6:00 மணிக்கு அம்மன் புதுமண்டபத்தில் எழுந்தருளி அங்கு தைலக்காப்பு மற்றும்  தீபாராதனை முடிந்து பின் சித்திரை வீதிகளை சுற்றி கோயில் சென்றடைவார். டிச.,21 ல் கோ ரதம், டிச.,22 கனக தண்டியலில் அம்மன், டிச.,23 திருவாதிரையன்று பொன்னுாஞ்சல் மண்டபத்தில் ரிஷப வாகனத்தில் சுவாமி, மர சிம்மாசனத்தில் அம்மன் எழுத்தருளி  ஆடிவீதியில் உலா வந்து கோயிலை அடைவர். டிச.,14 முதல் 23 வரை மாணிக்கவாசகர் சுவாமிகள் நுாறுகால் மண்டபத்தில் எழுத்தருளி தேவார கோஷ்டியினரால் திருவெண்பா பாடி தீபாரதனை உற்ஸவம் நடக்கும். உற்ஸவ நாட்களில் கோயில், உபயதாரர்கள் சார்பாகவோ, உபயதங்க ரத உலா, உபய திருக்கல்யாணம் நடத்தப்படாது என இணை கமிஷனர் நடராஜன்  தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !