மாயூரநாதசுவாமி கோயிலில் உழவாரப்பணி
ADDED :2595 days ago
ராஜபாளையம்: ராஜபாளையம் பெத்தவநல்லுார் மாயூரநாத சுவாமி கோயிலில் உழவாரப்பணி நடந்தது. பன்னிரு திருமுறை மன்ற சிவனடியார்கள், ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி நாட்டுநலப்பணி திட்டம், செஞ்சிலுவை சங்க மாணவர்கள் உழவாரப்பணிகளை மேற்கொண்டனர். சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில், 60க்கும் மேற்பட்டோருடன் கல்லுாரி பேராசிரியர்கள் கந்தசாமி, ரமேஷ்குமார், கந்தசாமிபாண்டியன் பங்கேற்றனர். கோயில் உட்பிரகாரம், சுற்றுப் பகுதி, மாடம், விளக்குகள், சிலைகள் சுத்தப்படுத்தப்பட்டன. அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பன்னிரு திருமுறை மன்ற செயலாளர் கோவிந்தராஜ் செய்திருந்தார்.