காரமடை அரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம்
ADDED :2553 days ago
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி விழாவின் துவக்க நிகழ்ச்சியாக, பகல் பத்து உற்சவம் எனும், பெரிய திருமொழி திருநாள் துவங்கியது.கோவிலின் உள்ளே வலம் வந்து ரங்க மண்டபத்தில் அரங்கநாதப் பெருமாள் எழுந்தருளினார். பிறகு நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர் ஆகியோர் பெருமாள் முன்பு எழுந்தருளினர்.அதன் பிறகு கோவில் ஸ்தலத்தார் நல்லான் சக்ரவர்த்தி, வேதவியாச பட்டாச்சாரியர் மற்றும் கோவில் அர்ச்சகர்கள், அரங்கநாதப் பெருமாள் முன்பு, திருமங்கையாழ்வார் அருளிய திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், சிறிய திருமடல் உள்ளிட்ட திவ்ய பிரபந்தங்களை சேவித்தனர்.