திருவிளையாடல் பாடியவர்
ADDED :2594 days ago
சிவனின் அருள் பெற்ற பரஞ்சோதி முனிவர் ஒருமுறை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மண்டபத்தில் உறங்கிய போது, கனவில் வந்த மீனாட்சி, மதுரையில் சிவன் நிகழ்த்திய அறுபத்துநான்கு திருவிளையாடல்களையும் புராணமாக எழுத உத்தரவிட்டாள். முனிவரும் அதைச் செய்யுள் வடிவத்தில் எழுதி திருவிளையாடல் புராணம் என பெயரிட்டார். ’திரு’ என்றால் ’மதிப்புக்குரிய கடவுள்’. கடவுளின் விளையாட்டு என்பது இதன் பொருள்.