திருநள்ளார் சனீஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
ADDED :2522 days ago
காரைக்கால்: திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சோமவாரத்தை முன்னிட்டு நேற்று 1008 சங்காபிஷேகம் நடந்தது.காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில், சோமவார நிறைவையொட்டி, நேற்று 1008 சங்கு அபிஷேகம் நடந்தது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கலசபூஜை, மகாபூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. தர்பாரண்யேஸ்வர், தியாகராஜருக்கு மகா அபிஷேகம். கோவிலில் உள்ள சொர்ணகணபதி, முருகர், பிரணாம்பிகை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும் மகா தீபாராதனையும் நடந்தது.சங்காபிஷேகத்தில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி விக்ராந்தராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.