ராமேஸ்வரம் கோயில் குளத்தில் குப்பை
ADDED :2589 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தீர்த்த குளத்தில் குப்பை குவிந்துள்ளதால் பக்தர்கள் முகம் சுளித்தனர். ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடிச் செல்கின்றனர். இதில் கோயிலின் 7 வது தீர்த்தமான சேதுமாதவர் தீர்த்த குளத்தில் தாமரை பூக்களுடன் குப்பை, மரத்தில் உதிர்ந்த இலைகள் குவிந்து கிடக்கிறது. அதனை அகற்றி சுத்தம் செய்யாததால், தாமரை பூத்த சேதுமாதவர் தீர்த்த குளத்தை காணும் பக்தர்கள் முகம் சுளித்தபடி செல்கின்றனர். எனவே தீர்த்த குளத்தை சுத்தம் செய்து புனிதம் காக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.