உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேட்டை வெங்கடேஸ்வர பெருமாள் திருக்கல்யாணம்

வேட்டை வெங்கடேஸ்வர பெருமாள் திருக்கல்யாணம்

ராஜபாளையம்: ராஜபாளையம் ஸ்ரீ வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில்  திருக்கல்யாணத்தை முன்னிட்டுமூன்று நாட்கள் லட்சார்ச்சனை நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று   திருக்கல்யாணம் நடந்தது.இதற்காக காலையில் ஸ்ரீமஹாலட்சுமி, ஸ்ரீசுதர்சன, ஸ்ரீலட்சுமி நரசிம்ம ஹோமம்,ஸ்ரீதன்வந்திரி ஹோமங்களை தொடர்ந்து சுவாமி, தாயாருக்கு அபிஷேகம் அலங்காரம், நெய்வேத்யம் நடைபெற்றது. இதன்பின் திருக்கல்யாண கோலம் பூண்ட ஸ்ரீ வேட்டைவெங்கடேச பெருமாள், ஸ்ரீ பத்மாவதி தாயாருக்கு வேத விற்பன்னர்கள் மந்திரம், மேளம் முழங்க  திருக்கல்யாணம் நடந்தது.  ஏராளமான பக்தர்கள்  தரிசித்தனர்.   திருமஞ்சன பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் அர்ச்சகர் திருமலை அய்யங்கார், முரளிவெங்கட்டராமன், சுந்தர்ராஜன்,  சவுந்தர்ராஜன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !