கன்னிநாட்டின் கருணைக்கடல்
ADDED :5024 days ago
தேவிக்குரிய தலங்களில் சிறந்தது மதுரை. சக்திபீடங்களில் மந்திரிணி பீடம் என்று இதற்குப் பெயர். இங்கு மீனாட்சி என்னும் திருநாமத்தோடு அம்பிகை அருளாட்சி செய்கிறாள்.கண்ணுக்கு அணிகலன் தாட்சண்யம். அதனாலேயே அவள் அங்கயற்கண்ணி என்று பெயர் பெற்றாள். கழுத்துக்கு அணிகலன் மாங்கல்யம். அவளது திருக்கல்யாணம் உலகப்பிரசித்தம் பெற்றது. இந்த இரு விஷயத்திலும் மீனாட்சியம்ம னுக்கு மிகுந்த பொருத்தம் உண்டு. அவள் மீன்களின் கண்கள் இமைக்காமல் இருப்பது போல், பக்தர்களை இமைக்காமல் பாதுகாப்பவள். மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி என்று சொல்வது வழக்கு. இவள் கன்னியாக இருந்தபோதே பட்டம் சூடிக்கொண்ட பெருமை பெற்றவள் என்பதால் மதுரைக்கு கன்னிநாடு என்ற பெயர் உண்டு.