உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொளத்தூர் மாரியம்மன் கோவிலுக்கு காவடி ஊர்வலம்

கொளத்தூர் மாரியம்மன் கோவிலுக்கு காவடி ஊர்வலம்

கொளத்தூர்: மாரியம்மன் கோவிலுக்கு, பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக சென்றனர். கொளத்தூர், கோவிந்தபாடி மாரியம்மன் கோவில் உற்சவர் சிலை, அருகிலுள்ள திரவுபதி அம்மன் கோவிலில் இருந்தது. 42 ஆண்டுகளுக்கு பின் கடந்த, 7 ல், மாரியம்மன் கோவிலுக்கு சிலை கொண்டு வரப்பட்டது. மகிழ்ச்சியடைந்த பக்தர்கள் நேற்று (டிசம்., 10ல்) மாலை, 4:30 மணிக்கு அருகிலுள்ள பழனியாண்டவர் கோவிலில் இருந்து, காவடி எடுத்து மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். விரைவில், கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் ஏற்பாடு செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !