உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விக்கிரவாண்டி முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகவிழா

விக்கிரவாண்டி முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகவிழா

விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை (டிசம்., 12ல்) நடக்கிறது.விக்கிரவாண்டியில் உள்ள 300 ஆண்டு பழமையான முத்துமாரியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டதையொட்டி நாளை (டிசம்., 12ல்) கும்பாபிஷேகம் நடந்தது.

இதற்கான பூஜை நேற்று முன்தினம் (டிசம்., 9ல்) கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று மாலை வாஸ்து சாந்தி, பிரவேசபலி, மிருத்சங்கிரகணம், கோபூஜை, மகாலட்சுமி பூஜை, தன பூஜை, நவகிரக ஹோமம், பூர்ணா ஹூதி நடந்து முதல்கால யாக பூஜை ஆரம்பமாகியது.இன்று இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெறுகிறது. நாளை 12 ம் தேதி காலை 7.00 மணிக்கு நான்குகால யாக பூஜை ஆரம்பமாகி 9.00 மணிக்கு முடிந்து 9.30 மணிக்கு கடம் புறப் பாடாகி காலை 10.10 மணிக்கு மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞானபாலய சுவாமி கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !