உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சி அம்மன் கோயிலில் டிச. 22ல் ஆருத்ரா தரிசனம்

மீனாட்சி அம்மன் கோயிலில் டிச. 22ல் ஆருத்ரா தரிசனம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் டிச., 22 இரவு முதல் டிச., 23 அதிகாலை வரை ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. இக்கோயிலில் மட்டும் தான் பஞ்சலோகத்திலான பஞ்ச சபை நடராஜருக்கு உரிய ஐந்து உற்சவர் சிலைகள் உள்ளன. இக்கோயிலில் கால்மாறி ஆடிய வெள்ளியம்பல நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர் ஆகியோரது உற்சவ சிலைகள் சுவாமி சன்னதியின் ஆறுகால் பீடத்தில் எழுந்தருள செய்யப்படும். இதர 4 சபை நடராஜர், சிவகாமி அம்மன் நுாறு கால் மண்டபத்தில் எழுந்தருள செய்யப்படும். இரு இடங்களிலும் ஒரே நேரத்தில் அபிேஷகம், ஆராதனை நடக்கும். பின்னர் காலை 7:00 மணிக்கு பஞ்சசபை ஐந்து உற்சவ நடராஜர், சிவகாமி அம்மனுடன் மாசி வீதிகளில் வீதி உலா வருவர். அபிேஷக பொருட்களான பால், தயிர், இளநீர், நெய், மஞ்சள்பொடி, திரவியப்பொடி, எண்ணெயை டிச.,22 இரவு 7:00 மணிக்குள் கோயில் உள்துறை அலுவலகத்தில் வழங்கலாம் என இணை கமிஷனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !