உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரிய மாரியம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு

பெரிய மாரியம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு

ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன், பெரியமாரியம்மன் கோவில், குண்டம் விழா, கடந்த, 9ல் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதை தொடர்ந்து தேரோட்டம், தீர்த்த ஊர்வலம், அலகு குத்துதல், அக்னி சட்டி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்து வருகின்றன. நேற்று மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. இதையடுத்து கோவில் வளாகத்தில், பொங்கல் வைபவம் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள், சர்க்கரை பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !