சபரிமலை சீசனில் 14 நாளில் பழநியில் ரூ.1.32 கோடி வசூல்
ADDED :2823 days ago
பழநி: சபரிமலை சீசனை முன்னிட்டு குவிந்த பக்தர்களால், பழநி முருகன்கோயில் உண்டியலில், 14 நாட்களில் ரூ. ஒருகோடியே 32 லட்சத்து 17 ஆயிரம் வசூலாகியுள்ளது. சபரிமலை சீசனை முன்னிட்டு, பழநி முருகன்கோயிலுக்கு ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் 14 நாட்களில் உண்டியல்கள் நிரம்பின. நேற்று கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. அதில் ரொக்கமாக ரூ. ஒரு கோடியே 32 லட்சத்து 17ஆயிரத்து 660 கிடைத்துள்ளது. தங்கம்-725 கிராம், வெள்ளி-4,190 கிராம், அமெரிக்கா, மலேசியா போன்ற வெளிநாட்டு கரன்சிகள்-1,229 உள்ளது. இணைஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், திண்டுக்கல் உதவிஆணையர் சிவலிங்கம், மேலாளர் உமா, வங்கிப்பணியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.