பராமரிப்பின்றி பழமையான கோவில் கும்பாபிஷேகம் நடத்த எதிர்பார்ப்பு
ADDED :2596 days ago
பல்லடம்: பல்லடம், ஸ்ரீதண்டாயுதபாணி கோவில் சிதிலமடைந்து வரும் நிலையில், மராமத்துப்பணியில், பக்தர்கள் சந்தேகம் கிளப்பியுள்ளனர். பல்லடம் மங்கலம் ரோட்டில் உள்ள பழமையான ஸ்ரீதண்டாயுதபாணி கோவில், பல ஆண்டாக, கும்பாபிஷேகம் செய்யப்படவில்லை. கோவில் கோபுரம், மூலஸ்தானம், சுற்றுச்சுவர் ஆகியவை சிதிலமடைந்து வருகிறது. சமீபத்தில் பெய்த மழையில், சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்தது; தற்போது, அந்த இடத்தில், பேட்ச் வேலை செய்யப்பட்டுள்ளது.