மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு
ADDED :2591 days ago
சோழவந்தான்: திருவாலவாயநல்லுார் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நேற்று முன் தினம் மாலை கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம், சிறப்பு வழிபாடு நடந்தன. பாலமுருகன் பட்டர் தலைமையில் பூஜைகள் நடந்தன. ஏற்பாடுகளை பூஜாரி கணேசன், கிராமத்தினர் செய்திருந்தனர். சோழவந்தான் பிரளயநாதர் சுவாமி கோயிலிலும் சங்காபிஷேகம் நடந்தது.