உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ராஜிவ்நகர் சமயபுரம் மாரியம்மன் கோவிலில், கடந்த, 10ல் காலை, 6:00 மணிக்கு, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், லட்சுமி ஹோமம், கோமாதா பூஜை நடந்தது. மாலை, 3:00 மணிக்கு, முக்கூடல் நதிகளில் தீர்த்தம் எடுத்து வருதல், ஊர் எல்லையில் இருந்து, முளைப்பாரி கொண்டு வருதல் நடந்தது. நேற்று காலை, 3:30 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாஜனம், பிம்பசுத்தி மாரியம்மன், பரிவார தெய்வங்களுக்கு, காப்புக்கட்டுதல், மண்டபஅர்ச்சனை, வேதிகார்ச்சனை, யாத்ராதானம் ஆகியவை நடந்தது. காலை, 5:00 மணிக்கு கும்பாபி?ஷகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !