திரவுபதியம்மன் கோவில் குண்டம் திருவிழா
ஆனைமலை: ஆனைமலை தர்மராஜா திரவுபதியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா வரும் 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஆனைமலையில் 400 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த ஆண்டு குண்டம் திருவிழா மகா சிவராத்திரி முடிந்து அடுத்த நாள் வரும் 21ம் தேதி காலை 8.30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
அடுத்த மாதம் 7ம் தேதி இரவு 8.00 மணிக்கு அம்மன் ஆபரணம் பூணுதல் ஊர்வலமும், இரவு 1.00 மணிக்கு அரவான் சிரசு ஊர்வலமும், 8ம் தேதி மாலை 4.00 மணிக்கு பெரிய திருத்தேர் வடம் பிடித்தலும், இரவு 8.30 மணிக்கு குண்டம் பூ வளர்த்தலும், 9ம் தேதி காலை 8.30 மணிக்கு பூவில் இறங்குதலும் நடக்கிறது.10ம் தேதி மதியம் 1.00 மணிக்கு திருத்தேர் நிலைநிறுத்தலும், மாலை 3.30 மணிக்கு ஊஞ்சல், பட்டாபிஷேகமும், 11ம் தேதி காலை 11.30 மணிக்கு மஞ்சல் நீராடுதலும், இரவு 7.00 மணிக்கு போர் மன்னன் காவு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரமேஷ், விழாக்குழு தலைவர் விக்ரம், கோவில் அருளாளிகள், முறைதாரர்கள், விழாக்குழுவினர் ஆகியோர் செய்து வருகின்றனர்.