உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பகவான் யோகி ராம்சுரத்குமார் குருமகராஜின் ஆராதனை விழா

பகவான் யோகி ராம்சுரத்குமார் குருமகராஜின் ஆராதனை விழா

திருக்கோவிலூர் : பகவான் யோகி ராம்சுரத்குமார் குரு மகராஜின் பதினொன்றாம் ஆண்டு ஆராதனை ஹோமங்களுடன் துவங்கியது. திருவண்ணாமலையில், பகவான் ஆசிரம வளாகத்தில் குரு மகராஜின் பதினொன்றாம் ஆண்டு ஆராதனை விழாவின் முதல் நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. காலை 6.30 மணிக்கு கணபதி ஹோமம், ஆவஹந்தி ஹோமம், பகவான் மூலமந்திர ஹோமங்கள், நான்கு வேத பாராயணம், அதிஷ்டானத்தில் சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை நடந்தது.
முற்பகல் 11 மணிக்கு பக்தர்கள் பகவானுடன் ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மாலை 3.30 மணிக்கு மதுரை ஸ்ரீ மாசானமுத்து குழுவினரின் பஜனை, தொடர்ந்து 5 மணிக்கு குமாரி சிந்துஜா குழுவினரின் காஞ்சி மகாபெரியவர் சத் சரித்திரம் இசை நிகழ்ச்சி, இரவு 7 மணிக்கு பக்தி இசை நிகழ்ச்சி நடந்தது. தபோவனம் பூஜ்ய ஸ்ரீ நித்யானந்தகிரி சுவாமி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று 18ம் தேதி காலை 6.30 மணிக்கு மகன்யாசம், அதிஷ்டானத்தில் சிறப்பு அபிஷேகம், அர்ச்சனைகள், பூஜைகளும் நடக்கிறது. காலை 9 மணிக்கு தபோவனம் பூஜ்ய ஸ்ரீ நித்யானந்தகிரி சுவாமி முன்னிலையில், தீர்த்த நாராயண பூஜையும், 11 மணிக்கு பக்தர்கள் பஜனையும், மாலை 3.30 மணிக்கு சற்குருநாதன் ஓதுவாரின் தேவாரம் மற்றும் இரவு 8 மணிக்கு பகவானின் உற்சவ மூர்த்தியுடன் வெள்ளி ரத ஊர்வலம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஜஸ்டிஸ் அருணாசலம் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !