உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காளபரமேஸ்வரி கோவிலில் பிப்., 21ல் திருத்தேர் உற்சவம்

அங்காளபரமேஸ்வரி கோவிலில் பிப்., 21ல் திருத்தேர் உற்சவம்

நாமக்கல்: ஓலப்பட்டி அங்காளபரமேஸ்வரி கோவிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி 21ம் தேதி, திருத்தேர் உற்சவ விழா நடக்கிறது.
நாமக்கல் அடுத்த ஓலைப்பட்டியில், அங்காளபரமேஸ்வரி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் சிவராத்திரியை முன்னிட்டு திருத்தேர் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, பிப்ரவரி 21ம் தேதி நடக்கிறது.நேற்று காலை 9 மணிக்கு, ஆயக்கால் போடுதல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, நாளை (பிப்., 19) காலை 7.30 மணிக்கு கலசம் வைத்து சண்டிக்கல் பூஜை நடக்கிறது. 20ம் தேதி மகா சிவராத்திரி அன்று இரவு 10 மணிக்கு அம்பாளுக்கு விசேஷ அபிஷேகம், அம்மன் அழைத்தல், கொடியேற்றுதல், முகம் எடுத்து இரவு ஊர்வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. பிப்ரவரி 21ம் தேதி காலை 7.30 மணிக்கு, சக்தி கரகம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்து கோவிலை அடைதல், அலகு தரிசனம், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடர்ந்து, பகல் 12 மணிக்கு திருக்கல்யாண மகோத்ஸவம், மாலை 4.30 மணிக்கு ஸ்வாமி ரதம் ஏறுதல், திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. பிப்ரவரி 22ம் தேதி பகல் 1.30 மணிக்கு, மயான பூஜை, இரவு 10 மணிக்கு ஊர்வலக்காட்சி, வாணவேடிக்கையும் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர், விழாக்குழுவினர், ஊர் மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !