உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்ணனூர் கோவிலில் மஹா சிவராத்திரி விழா

கண்ணனூர் கோவிலில் மஹா சிவராத்திரி விழா

துறையூர்: துறையூர் அருகேயுள்ள கண்ணனூர் அங்காள பரமேஸ்வரியம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழாவும், தொடர்ந்து 23ம் தேதி திருத்தேர் உற்சவ திருவிழாவும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கண்ணனூர் அங்காள பரமேஸ்வரியம்மன் கோவிலில் கடந்த சில மாதத்துக்கு முன் விமரிசையாக கும்பாபிஷேகம் நடந்தது.கும்பாபிஷேகம் நடத்த திருப்பணிகள் நடந்ததால் கடந்த ஆண்டில் விழாக்கள் விமரிசையாக நடைபெறவில்லை. இதனால் தற்போது மகா சிவராத்திரி விழாவும், தேர் திருவிழாவும் விமரிசையாக நடத்த கோவில் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கோவிலில் நாளை 19ம் தேதி மகா சிவராத்திரி விழாவும், தொடர்ந்து 14 நாள் திருத்தேர் உற்சவ விழாவும் நடைபெறுகிறது. 20ம் தேதி கரகம் பாலிப்பு, 22ம் தேதி குதிரை வாகனத்திலும், 23ம் தேதி திருத்தேரிலும் அம்மன் பவனி, மார்ச் 3ம் தேதி மஞ்சள் நீர் விழா, நான்காம் தேதி சுத்த பூஜை நடைபெறும். பிப்ரவரி 20, 23 மற்றும் மார்ச் 3 ஆகிய நாட்களில் வாணவேடிக்கை, வெடி வழிபாடு நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !