உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை கோவில்களில் மகா சிவராத்திரி விழா

உடுமலை கோவில்களில் மகா சிவராத்திரி விழா

உடுமலை:உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள கோவில்களில் மகா சிவராத்திரியையொட்டி, சிறப்பு பூஜைகள் வரும் 20ம் தேதி நடைபெறுகிறது.
உடுமலை அருகேயுள்ள பள்ளபாளையம் உள்ளொளிநாதர் கோவில் மகா சிவராத்திரி விழா வரும் 20ம் தேதி நடைபெறுகிறது. விழாவையொட்டி, இரவு 8.00 மணி முதல் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.பூளவாடி அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், வரும் 20ம் தேதி காலை 10.30 மணி முதல் கணபதி ஹோமம், முகூர்த்த கம்பம் நடுதல், இரவு 9.00 மணிக்கு கங்கனம் கட்டுதல் நிகழ்ச்சியும், இரவு 10.00 மணிக்கு கும்பஸ்தாபனம், தீர்த்தக்காவடிகளுடன் தம்பை வாத்தியங்கள் முழங்க அம்மனை அழைத்து வருதல் உள்ளிட்டவையும், இரவு 12.00 மணிக்கு தீர்த்தக்காவடிகள் செலுத்துதல் அபிஷேக பூஜைகள் நடக்கின்றன.

வரும் 21ம் தேதி அதிகாலை 5.00 மணிக்கு விசேஷ அலங்கார பூஜை, காலை 9.00 மணிக்கு திருக்கல்யாண சீர் கொண்டு வருதல், காலை 9.30 மணிக்கு முளைப்
பாலிகை எடுத்து வருதல், பகல் 11.00 மணிக்கு அம்மன் திருக்கல்யாணம், ஊஞ்சல்சேவையும் இடம்பெறுகிறது. வரும் 22ம் தேதி காலை 10.30 மணி முதல் 12.00 மணிக்குள் சக்தி கும்ப தீர்த்தம் செலுத்தி மறு அபிஷேக பூஜையும் நடக்கிறது.உடுமலை முத்தையா பிள்ளை லே-அவுட் சக்தி விநாயகர் கோவிலில், மகா சிவராத்திரியை ஒட்டி 20ம் தேதி மாலை 6.00 மணி முதல் 21ம் தேதி காலை 6.00 மணி வரை நான்கு கால பூஜைகள், சிறப்பு அபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது. கொடிங்கியம் மகாலட்சுமி அம்மன் கோவிலில், சிவராத்திரியையொட்டி, அன்று இரவு 10.00 மணி முதல் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
கொங்கல் நகரம் காணியப்ப மசராயர் கோவிலில், வரும் 19ம் தேதி பள்ளயம் போதுல், 20ம் தேதி அதிகாலை 5.00 மணிக்கு கிருஷ்ணர் கோவிலிருந்து ஊர்வலமாக சுவாமி காட்டுக்கோவிலுக்கு செல்லுதல், மற்றும் காலை 6.00 மணி முதல் 7.00 மணிக்குள் பள்ளய பூஜைகளும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !