பண்ணாரியில் ஏப்ரல் 10ல் குண்டம் : மார்ச் 26ல் பூச்சாட்டுடன் துவக்கம்
சத்தியமங்கலம்: பண்ணாரி மாரியம்மன் கோவிலில், ஏப்ரல் மாதம் 10ம் தேதி பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.சத்தியமங்கலம் அடுத்துள்ளது பண்ணாரி மாரியம்மன் கோவில். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர நட்சத்திரத்தை அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை அதிகாலை, பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தீ மிதிப்பர்.நடப்பாண்டு குண்டம் விழா மார்ச் 26ம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது.
ஏப்ரல் 3ம் தேதி இரவு கம்பம் நடும் விழாவும், ஏப்ரல் 10ம் தேதி அதிகாலை 4 மணிக்கு குண்டம் விழாவின் முக்கிய நிகழ்வான பக்தர்கள் தீ மிதிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.ஏப்ரல் 11ம் தேதி இரவு புஷ்பரதம், ஏப்ரல் 12ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா, ஏப்ரல் 13ம் தேதி இரவு விளக்குபூஜை மற்றும் தங்கத்தேர் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்ரல் 16ம் தேதி மறுபூஜையோடு குண்டம் விழா நிறைவடைகிறது.ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் (பொறுப்பு) தனபால் தலைமையில், அதிகாரிகள் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.