புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் கோடி அர்ச்சனை பிப்., 19ம் தேதி துவக்கம்
ADDED :5080 days ago
புவனகிரி : புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் கோடி அர்ச்சனை விழா நாளை துவங்குகிறது. புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் ஏக தின லட்சார்ச்சனை விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ராகவேந்திரா சுவாமிகள் மிருத்திகா பிருந்தாவனத்திற்கு கோடி அர்ச்சனை நடத்தப்படுகிறது. விழா நாளை (19ம் தேதி) துவங்கி 28ம் தேதி வரை நடக்கிறது. கோடி அர்ச்சனை நடைபெறும் 10 நாட்களிலிலும் உடுப்பி பன்னஜ் ராகவேந்திர தீர்த்த சுவாமிகளால் பாகவத ஸப்தாஹம் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது.
மந்த்ராலயம் ராகவேந்திர சுவாமிகளின் வம்சவத்தவரான பண்டித கேசரி ராஜா கிரி ஆச்சார் மற்றும் அவரது மகனும் மந்த்ராலயா வித்வான் பவமான ஆச்சார் சிறப்பு பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு அருளாசி வழங்குகின்றனர். ஏற்பாடுகளை ராகவேந்திரா கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.