உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை கோவிலுக்கு தங்க ருத்ராட்ச மாலை

திருவண்ணாமலை கோவிலுக்கு தங்க ருத்ராட்ச மாலை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மூலவருக்கு சாத்த தங்க ருத்ராட்ச மாலையை சேலத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் நன்கொடையாக கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். இந்த ருத்தராட்ச மாலை, 25 ருத்தராட்சத்தில் தங்க தகடு பொருத்தி, அதில் டாலர் போன்று வடிவில் விநாயகர், முருகர், உடன் ரிஷப வாகனத்தில் சிவபெருமான், பார்வதி அமர்ந்திருப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. அதை அழகுற செய்யும் விதத்தில் பவழ கற்கள் பொருத்தப்பட்டிருந்தன. இந்த மாலைக்கு சிறப்பு பூஜைகள் செய்து அருணாசலேஸ்வரருக்கு சாத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !