தென்கரை வைகை ஆற்றில் ஐயப்பனுக்கு ஆராட்டு
ADDED :2567 days ago
காடுபட்டி: சோழவந்தான் தென்கரை வைகை ஆற்றில் ஐயப்பன் சுவாமிக்கு ஆராட்டு விழா நடந்தது.முன்னதாக யாகசாலை பூஜைகள் நடந்து கோயிலில் இருந்து சுவாமி செண்டை மேளம் முழங்க யானை மீது எழுந்தருளி ஊர்வலமாக ஆற்றில் எழுந்தருளினார். சுவாமிக்கு சந்தனம், இளநீர், நெய் உள்ளிட்ட 18 வகை திரவியங்களால் அபிஷேகம் நடந்தன. பின் ஆராட்டு விழா நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. சுவாமி ராஜஅலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏற்பாடுகளை அனைத்து ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.