திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு மரச்சப்பரம் உபயம்
ADDED :2566 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழாவின்போது 15 நாட்கள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடக்கும். அவர்களுடன் மர சப்பரத்தில் சண்டிகேஷ்வரரும் புறப்பாடாவார். அந்த மரச்சப்பரம் பழுதடைந்து உபயோகப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது உபயதாரர்கள் மூலம் புதிய மரச்சப்பரம் கோயிலுக்கு வழங்கப்பட்டது.